தரமற்று போடப்படும் சாலைகள் ​ தவிக்கும் பொதுமக்கள்

கீழக்கரை முக்கு  ரோட்டிலிருந்து கடற்கரை வரை உள்ள 1.4 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி, 04.12.2016 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தப் பணியினை மாநில நெடுஞ்சாலை துறையினர் அருப்புக்கோட்டையை  சேர்ந்த S.P.K கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதைப்பற்றிய செய்தியையும் மக்கள் ஓத்துழைப்பு கொடுக்கவும் நாம் வேண்டுகோள் விடுத்து இருந்தோம். ஆனால் தற்போது அவசர கதியில் மேற்கொள்ளப்படும் இந்த சாலை சீரமைப்பு பணியினால் தரமற்ற வேலைகள் நடை பெற்று வருகிறது. ஒப்பந்த முறைப்படி பழைய சாலைகள் முறையாக, முழுமையாக அகற்றப் படாமல், புதிய சாலை அமைப்பதால் ஒன்றரை அடிக்கு மேல் சாலை உயர்ந்துள்ளது. இதனால் உயர் அழுத்த மின்சார கம்பிகள் மீது வாகனங்களின் மேற்கூரை உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த சாலை சீரமைப்பு பனியின் போது குடிநீர் மற்றும் சாக்கடை குழாய்கள் பல இடங்களில் உடைக்கப்பட்டுள்ளதால் சுகாதார கேடும் நிலவுகிறது.  இது சம்பந்தமாக கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் சார்பாக இன்று முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு பல மனுக்கள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..