இறைச்சி வியாபரிகளை மகிழ்விக்கும் டிசம்பர் மாதம்.. சாமானியனை பரிதவிக்க வைக்கும் இறைச்சி வியாபாரம்..

டிசம்பர் மாதம் வந்தாலே கீழக்கரை களை கட்ட துவங்கி விடும். சீலா மீன் சீசனில் தொடங்கி கல்யாணம் வரை அதிகமாக டிசம்பர் மாதத்திலேயே நடைபெறும்.  ஆனால் இந்த மாதத்தையும் ஆட்றறைச்சி வியாபாரிகள் தங்களுக்கு சாதாகமாக்கி கிலோ 400 ரூபாய்க்கு விற்கும் இறைச்சியை அசாதாரண முறையில் 500 வரை விற்க தொடங்கி விடுகிறார்கள்.  வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வரும் மக்களோ அவசரத்தைக் கருதி வாங்க தொடங்கி விடுகிறார்கள் ஆனால் ஊரிலேயே வாழும் சாமானிய மனிதர்களும் விசேசங்கள் நடத்தும் ஏழை நடுத்தர மக்களும் இந்த விலையேற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.  இந்த வருடம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கீழக்கரை நகர் நல இயக்கம், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் மக்கள் டீம் காதர் மற்றும் சமூக நல ஆர்வம் கொண்ட சகோதரர்கள் தங்கள் கையில் பிரச்சினையை எடுத்துள்ளார்கள்.  அதன் எதிரொலியாக இன்று அனைவரும் ஒன்று திரண்டு கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்டாட்சியரை நேரடியா சந்தித்து மனு அளித்துள்ளனர்.  அம்மனுவில் கீழக்கரை ஆட்டிறைச்சி வியாபாரிகள் சின்டிகேட் அமைத்து எந்த முன்னரிவிப்பும் இல்லாமல் விலையேற்றம் செய்வதை தடுக்கவும், கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் சுமார் 35 லட்சம் செலவில் கட்டப்பட்டு திறக்கபடாமல் இருக்கும் ஆடு வதைக் கூடத்தை உடனடியாக திறக்க ஆவண செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த டிசம்பர் மாதம் கீழக்கரை வாசிகள் அனைவருக்கும் நாவுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான மாதமாக அமையும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..