கீழக்கரையில் உயர் மின் அழுத்த வயர்கள் பழுது பார்க்கும் பணிகள் தொடக்கம்..

கீழக்கரையில் கடந்த காலங்களில் வீட்டின் அருகாமையில் அமைந்திருக்கும் உயர் மின் அழுத்த வயர்களால் விபத்துக்கள் சில நடந்தது.  அதை நிவர்த்தி செய்யும் விதமாக கீழக்கரையில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் சார்பாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டது.  பின்னர் அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனுதாரர்களுக்கு மின்சார வாரியத்திடம் இருந்து விரைவில் நிவர்த்தி செய்யும் பணிகள் தொடங்கும் என்ற அறிவிப்பு அனுப்பப்பட்டது.  அதைத் தொடர்ந்து இன்று கீழ்ககரையில் நான்காவது வார்டு பகுதிக்குள் உட்பட்ட சில பகுதிகளில் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு நிவர்த்தி பணிகள் தொடங்கப்பட்டது.  மக்களின் மனுவை ஏற்று நிவர்த்தி பணியை தொடங்கிய தமிழ அரசு, கீழக்கரை மின்சார வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் கீழக்கரை மக்கள் களம், கீழை நியூஸ், கீழக்கரை சட்டப் போராளிகள் மற்றும் அனைத்து கீழக்கரை பொதுமக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

To Download Keelainews Android Application – Click on the Image