கீழக்கரையில் ஆஸ்துமா விழிப்புணர்வு நிகழ்ச்சி…

டிசம்பர் மாதம் உலமெங்கும் காலைப்பொழுது இனிதாக பனியுடன்,  குளிர்ச்சியுடன் துவங்குகிறது.  கீழக்கரையிலோ காலைப்பொழுது புகையிலும்,  தூசியிலும் விடிகிறது.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழக்கரை முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை சாலை சீரமைக்கும் பணி துவங்கியது.  ஆனால் தொடங்கிய சில நாட்களிலேயே தொடரப்பட்ட பணி அரைகுறையாக நிற்கிறது.  ஆகையால் நெடுஞ்சாலை முழுவதும் தூசியும் புகை மண்டலமுமாக காட்சியளிக்கிறது.  நோயாளிகள் முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.  இது தொடர்பாக இன்று காலை 08.00 மணியளவில் முஸ்லிம் பஜார் பிட்சா பேக்கரி அருகில் ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியை மதுரை நிசா ஃபவுண்டேசன், இராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனை,  தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம்,  போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் மற்றும் SDTU – (Social Democratic Trade Union) சோசியல் டெமாகரடிக் டிரேட் யூனியன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக முகமூடி (Face Mask) வழங்கப்பட்டது.  மெத்தனமாக இருக்கும் நெடுஞ்சாலைத்துறைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது,  சாலைகளில் அமைந்திருக்கும் உணவு விற்பனையாளர்களுக்கு உணவு பண்டங்களை முறையாக பாதுகப்பாக விற்பனை செய்வது பற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கீழ்க்கரை நிசா .ஃபவுன்டேசனை சார்ந்த சகோ. சித்திக் அவர்கள் ஆஸ்துமா விழிப்புணர்வு சம்பந்தமான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார்.  இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரையை சார்ந்த பல சமூக நல அமைப்புகளும் உதவிகளை வழங்கின.  தேவையான நேரத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ஏற்பாட்டளர்களுக்கு கீழக்கரை மக்கள் களம், கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் மற்றும் கீழை  நியூஸ் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவத்துக் கொள்ளப்படுகிறது.