கீழக்கரையில் இலவச சேவை மையம் ஆரம்பம்….

கீழக்கரையில் இன்று காலை 10.30 மணியளவில் கீழக்கரை தாலுகா நகராட்சி கட்டிட அலுவலகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் மலேரியா க்ளினிக் அருகில் இலவச சேவை மையம்  அனைத்து சமுதாய தன்னார்வ தொண்டர்களின் முயற்சியால் ஆரம்பம் செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கீழக்கரையின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பல சமூக சேவகர்கள் கலந்து கொண்டார்கள்.  இம்மையம் கீழக்கரை வட்ட அலுவலர் திரு.தமீம் ராசா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.    இம்மையத்தில் அனைத்து வகையான அரசு சம்பந்தப்பட்ட படிவங்களும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு,  பூர்த்தி செய்வதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அறியப்படுகிறது.  இம்மையம் வேலை நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை மக்கள் சேவைக்காக இயங்கும். இன்று மட்டும்  நீதிமன்றக் கட்டண வில்லை  ( Court Fee Stamp) இலவசமாக மக்கள் தேவை கருதி வழங்கப்படுகிறது.  தற்சமயம் 2 நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் வருங்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வண்ணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மேலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சேவை மூலம் இலவச காரியங்களையும் காசாக்கி சம்பாதித்து வந்த சுயநல வியாபாரிகளுக்கு பேரிடி இறங்கியுள்ளது.  மேலும் இதுபோன்ற இலவச மையம் தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.  இந்த சேவையில் களம் இறங்கியுள்ள அனைத்து சமுதாய சேவகர்களையும் கீழக்கரை மக்கள் களம்,  சட்டப் போராளிகள் குழுமம் மற்றும் கீழை செய்திகள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image