Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திங்கட் கிழமை அரசு விடுமுறையா?? காலை 11.30 வரை அதிகாரிகள் இல்லாத கீழக்கரை நகராட்சி..

திங்கட் கிழமை அரசு விடுமுறையா?? காலை 11.30 வரை அதிகாரிகள் இல்லாத கீழக்கரை நகராட்சி..

by keelai

திங்கட் கிழமை அரசு விடுமுறையா?? காலை 11.30 வரை அதிகாரிகள் இல்லாத கீழக்கரை நகராட்சி.. விழித்தெழுமா அரசாங்க அலுவலகம்.. மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமா??

kaalai-11-30-varai-athikaarikal-illaatha நீங்கள் இங்கு படத்தில் காண்பது நம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தின் காலை 11.30 மணி நிலவரம். அரசு சேவைகளுக்காக மக்கள் அலுவலகத்தை நாடியபோது, அதிகாரிகள் இல்லாததால் மக்கள் அதிர்ச்சி.  திங்கட் கிழமையும் விடுமுறையோ என்று எண்ணும் அளவுக்கு அலுவல்கள் கவனிக்க அதிகாரிகள் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது.  அரசியல் ஆட்சி முடிந்து அதிகாரிகள் ஆட்சி வந்தால் விடிவு பிறக்கும் என்று எண்ணியிருந்த மக்களுக்கு மீண்டும் ஏமாற்றம்.  என்று மாறும் இந்த அவல நிலை??.  இதுபோன்ற நிகழ்வு இது முதல் முறை அல்ல,  இது போன்று பலமுறை சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,  பின்னர் சிறிது காலம் மட்டும்,  முறையாக அலுவல்கள் நடக்கும்,  மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறிய கதைதான்.  பொதுமக்களுக்கு வருடத்தில் சில நாட்கள்தான் பண்டிகை களைப்பு என்றால்,  கீழக்கரை நகராட்சி அதிகாரிகளுக்கு வாரந்தோறும் பண்டிகை களிப்புதான் போல தோன்றுகிறது.  இந்த செய்தி வெளியிடும் நேரத்தில் முக்கிய நிர்வாக அதிகாரிகளான ஆணையரோ,  தலைமை அலுவலரோ, சுகாதார ஆய்வாளரோ யாரையும் காணக் கிடைக்காமல் பொதுமக்கள் தங்கள் மனுக்களுடன் அலைந்து திரிந்ததை காண முடிந்தது.   கீழ் மட்ட பணியாளர்கள் சிலரை மட்டுமே காண முடிந்தது.  அலுவல் காரணமாக கூட்டஙக்ளில் ஈடுபட்டு இருந்தோம் என்று உப்புக்கு சப்பில்லாத காரணங்கள் நிச்சயமாக நாம் எதிர்பார்கலாம்.  அவ்வாறு இருந்தாலும் அந்த சமயத்தில் மக்கள் தேவைகளை கவனிக்க பொறுப்பு அலுவலர்களை வைப்பது கடமையாகும்.  விடுமுறை நாட்களில் கூட மக்களுக்காக உழைக்கும் எத்தனையோ நல்லுள்ளம் கொண்ட அரசு அலவலர்களின் மத்தியில், இது போன்ற ஓ.பி அடிக்கும் செயல், பொது மக்கள் மத்தியில் கடும் வெறுப்பினை சம்பாதித்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!