Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் தமிழ்நாடு கேபிள் நிறுவனத்தின் மெத்தனப் போக்கு… கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு..

கீழக்கரையில் தமிழ்நாடு கேபிள் நிறுவனத்தின் மெத்தனப் போக்கு… கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு..

by keelai
கீழக்கரையில் தமிழ்நாடு கேபிள் நிறுவனத்தின் மெத்தனப் போக்குகீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு..’ keelai-tamilnadu-cable-niruvanathin-methana-pokku கீழக்கரை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் சார்பாக பல்வேறு ஈ சேவை வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான சேவை மையமும் அமைக்கப்பட்டது. அங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கீழக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொது மக்கள் பல்வேறு சேவைகளுக்காக வந்த வண்ணம் இருக்கிறார்கள்.  ஆனால் அங்கு பணி புரியும் ஊழியர்களோ பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் மெத்தனப் போக்கையே கையாள்கிறார்கள்.  எந்த விதமான சேவைகளுக்கும், எச்சமயத்தில் சென்றாலும் பிரிண்டர் பழுதாகியுள்ளது, பணியாட்கள் வேலைக்கு வரவில்லை போன்ற சலிப்படையும் பதிலே மக்களுக்கு கிடைக்கிறது.  அதற்கு மேலாக அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் சேவைக்காக வரக்கூடிய பொதுமக்களை தரக்குறைவாக பேசுவதாகவும்,  நடத்துவதாகவும் பரவலான கருத்தும் நிலவி வருகிறது .இதனால் பொதுமக்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இப்பிரச்சினையை தற்பொழுது கீழக்கரை நகர் நல இயக்கம் கையில் எடுத்துள்ளது.  அவ்வமைப்பின் சார்பாக மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் நாளான இன்று  செயலாளர் சகோ. பசீர் அகமது அவர்களால் மாவட்ட ஆட்சியரிடம் ஈ சேவை பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.  அம்மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் நேரடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!